2 வயது பெண் குழந்தை மத்திய பிரதேசத்தில் பட்டினியால் உயிரிழப்பு!
2 வயது பெண் குழந்தை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டினியால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. பிந்த் (Bhind) மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தொழிலாளர் ஒருவரை தனியார் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதால் அந்தக் குடும்பம் 2 நாட்கள் பட்டினியால் கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளரின் 2 வயது பெண் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதை அறிந்த அதிகாரிகள், முதலில் அந்தக் குடும்பத்திற்கு உணவளித்துள்ளனர். ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 2 வயது பெண் குழந்தை நேற்று உயிரிழந்தது. தொழிலாளரது குடும்பத்திற்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.