Categories: இந்தியா

2 மணிநேரமே தீபாவளி…உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…அதிர்ப்தியில் தமிழக மக்கள்….!!

Published by
Dinasuvadu desk
தமிழகத்தில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வந்தது.
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.
வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.  அதன் படி இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
தமிழகம் உள்பட  தென்மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரம் மாற்றப்படும்;   தமிழக அரசின் கோரிக்கையை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில்  2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

9 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago