+2 தேர்வில் புதுச்சேரியில் 87.32 % மாணவர்கள் தேர்ச்சி !முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரியில் +2 தேர்வில் 87.32 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக  கூறியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 15 ஆயிரத்து 75 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் 13 ஆயிரத்து 163 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் 5 ஆயிரத்து 842 பேரும், மாணவிகள் 7 ஆயிரத்து 321 தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி சதவீதம் 87.32 சதவிதமாக உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 0.64 % அதிகம் என்றும் தெரிவித்தார்.மேலும் 50 தனியார் பள்ளிகளும், ஒரே ஒரு அரசு பள்ளியும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்