2 ஆயிரம் கோடி சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் பாஜக-ஆம்ஆத்மி கைகலப்பு…!!குமுறிய பிஜேபி எம்.பி…!!
2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே சுமார் கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னேச்சர் பாலம் 154 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த பாலத்தில் நின்று டெல்லி நகரத்தின் அழகை ஒரு பறவையின் பார்வையில் ரசிக்க முடியும் என்கிறார்கள் .இந்த பாலத்தின் திறப்பு தொடக்க விழா நிகழ்ச்சி அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அங்கு அழைப்பில்லாமல் வந்ததாக டெல்லி பாஜக எம்பியும், மாநில தலைவருமான மனோஜ் திவாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.
பாஜக எம்பிமனோஜ்திவாரி பாதுகாப்புக்கு நின்ற காவலர்களை தாக்கியுள்ளார் இதனைத் தொடர்ந்து மேடையில் நின்றிருந்த திவாரியை ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லாகான் தள்ளி விட்ட சம்பவமும் அங்கு அரங்கேறியது.
இது குறித்து தெரிவித்த மனோஜ்திவாரி தமது மக்களவை தொகுதியில் தமது முயற்சியால் சிக்னேச்சர் பாலம் கட்டப்பட்டதாக குற்றம் சாட்டிய நிலையில் கெஜ்ரிவால் பாஜக வேண்டுமேன்றே திட்டமிட்டு நிகழ்ச்சியில் ரகளை செய்வதாக அவரும் குற்றம்சாட்டியுள்ளார்.
DINASUVADU