வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாம்பு இருந்ததால் அலறியடித்து ஓடிய வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள்
இந்தியாவில் சில மாநிலங்களில் இன்று இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் மாநிலத்தில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் வாக்களிக்கக் காத்திருந்தனர்.
அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தில் இருந்து சத்தம் வெளியாகியது. இயந்திரத்திற்குள் பாம்பு இருப்பதை பார்த்த வாக்காளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து பயத்தில் சத்தம் போட்டார்.
அவர் போட்ட சத்தத்தில் வரிசையில் இருந்த வாக்காளர்களும் , வாக்கு சாவடி மையத்தில் இருந்த அதிகாரிகளும் அலறியடித்து ஓடினார்.பின்பு போலீசார் மூலம் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் இருந்த பாம்பை வெளியேறினார். இந்த சம்பவத்தினால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நின்றது.