சீனாவின் ஹாங்சோவில் நாளை 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் செயலை கண்டிக்கும் விதமாக இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பங்கேற்க இருந்தார்.
சீனாவின் செயலால் அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனுமதி மறுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் இந்திய அணியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியா – சீன இடையே பல லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தாலும், இரு நாடுகள் இடையே எல்லை பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்குறது. இந்தியாவின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் குறிப்பாக ந்திய – சீன எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தம் என்று சொல்லி வருகிறது.
அதுமட்டுமில்லாமல், அவ்வப்போது எல்லைப்பகுதிகளை கடந்துஉள்ளே நுழையவும் சீனா முயற்சித்து வருகிறது. இந்த சமயத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா அனுமதி மறுத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…