மிசோரம் தேர்தல் முடிவுகள் 1998 தேர்தலின் சாயலில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஓவ்வொரு 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும் ஒரு மாற்றம் என்பது மிசோர அரசியல் சூழலில் எழுத்தப்படாத விதி என்றும் கருதுகின்றனர். கடந்த 2013 இடைத்தேர்தலில் வென்ற காங்கிரசு ஆட்சிக்காலம் டிச,15,2018 ல் முடிவடைவதையொட்டி அறிவிக்கப்பட்ட 2018 க்கான தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. 7.68 லட்சம் வாக்காளர்களோடும் ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியாகவும் விளங்கும் மாநிலம் மிசோரம். கடந்த நவ,2018 ல் நடந்த வாக்குப்பதிவில் 73% வாக்குகள் பதிவாகின. 11,டிச,2018 ல் நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் மிசோர தேசிய முன்னணி கட்சியின் 1998ம் ஆண்டின் தேர்தலைப் போலவே 2018 தேர்தலும் அமைந்துள்ளது. நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின்படி 40க்கு 26 இடங்களை வென்றுள்ளது மி.தே மு . 7 இடங்களை மிசோரம் மக்கள் இயக்கமும், 5 இடங்களை காங்கிரசும் , ஒன்றை தனித்துப் போட்டியிட்ட சுயேட்சை ஓருவரும் ஓரே ஒரு இடத்தில் மட்டும் பாஜக வென்றுள்ளது.
1998 – 2008 வரை சோரம்தங்கா அவர்களின் மி.தே மு ஆண்டுவந்த நிலையில் 2018 வரையில் காங்கிரசும் ஆண்டுவந்தது. இப்போதைய முடிவுகளால் மீண்டும் 2018 ல் மி.தே.மு ஆட்சியமைக்க உள்ளது. இந்தியாவின் 8 வடகிழக்
கு மாகாணங்களில் ஒன்றான மிசோரத்தில் 1990 ல் இறந்த மிதேமுவின் நிறுவனரான பு லால்தெங்கா இறந்தபின் தலைமைப்பொறுப்புக்கு வந்தார் பு சோரம்தங்கா (முன்னாள் முதல்வராகவும் இருந்துள்ளார்). மி.தே.மு 1989 ல் தன் முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது தொடங்கி 2018 வரையிலான மிசோரம் அரசியலில் 26 இடங்களை வென்றிருப்பது இதுவே முதல் முறை. மேலும் மிதேமுவின் இதுநாள் வரையான தன் சாதனையை தானே முறியடித்துள்ளது. இதற்கு முன் 1987 ல் 24 இடங்களை வென்ற போதும் அப்போது பதிவு செய்யப்படாத இயக்கமாக அதே சமயம் ஒருங்கிணைந்த சுயேட்சைகளின் கூட்டமாக இருந்தது மி.தே.மு என்பது குறிப்பிடத்தக்கது.இது கிட்டத்தட்ட அஸ்ஸாமின் 1985 தேர்தலைப் போல சுயேட்சைகள் இணைந்து ஒரே சின்னத்தில் வென்று ஆட்சியமைத்ததை நினைவுபடுத்துகிறது.
அதேபோலத்தான் இப்போதைய முடிவுகளும் 1998ன் மிசொரம் தேர்தலை நினைவுபடுத்துகிறது. அதாவது 1998 ல் நடந்த தேர்தலில் மிதேமு – 21 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் பெற்றது.2003 ல் நடந்த தேர்தலில் மிதேமு மீண்டும் அதே 21 இடங்களையும் காங்கிரஸ் கொஞ்சம் முன்னேறி 12 இடங்களையும் பெற்றது.2008 தேர்தலில் 32 இடங்களை காங்கிரசும் 3 இடங்கள் மட்டும் மிதேமுவும் பெற்றன. அதற்குப் பிறகு காங்கிரஸ் அங்கு தோற்கவில்லை.இப்போது மீண்டும் வெறும் 5 இடங்களை மட்டுமே பிடித்திருப்பதால் இந்தத் தேர்தல் 1998 தேர்தலை நினைவுபடுத்துவதாக உள்ளதாய் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…