பச்சிளம் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலின்டர் வாங்க காசில்லாத உ.பி பிஜேபி அரசு… ராமர் சிலைக்கு ரூ.196 கோடி ஏன்….??
ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராமர் பிறந்தார் என்று கூறப்படும்- உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள இடத்திற்கு அருகே சரயூ ஆற்றங்கரையில் சிலை அமைகிறது. உத்தரப்பிரதேச பாஜக அரசின் சிலை அமைக்கும் முடிவுக்கு மோடி அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பதுடன், சிலை அமைப்பதற்கான முழுச்செலவையும் ஏற்று, உடனடியாக ரூ. 133 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைப்பதற்கும் ஏற்கெனவே மோடி அரசு ரூ. 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பிஜேபி கட்சி ஆட்சியில் உள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போனார்கள். ஏனெனில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதற்கு காசில்லை என்றது யோகி அரசு.
கடந்த வாரம் இவர் தனது கட்சியின் கேரளா கமிட்டி நடத்திய பேரணியில் பங்கெடுக்க சென்றார்.அப்போதும் 24 மணி நேரத்தில் 16க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்து போனார்கள்.எனவேதான் கேரளா வரும் உ.பி. முதல்வர் யோகி அங்குள்ள மருத்துவமனைகளை காணவருமாறு அழைத்தது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…..