மும்பையில் கான்ஸ்டபிளை பீர் பாட்டிலால் தாக்கிய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கான்ஸ்டபிள் வினோத் மத்ரே (50) புறநகர் கோவாண்டியின் டாடா நகர் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த மூன்று பேரைக் பார்த்த்துள்ளார். அவர்களில் இருவர் கூர்மையான கத்தி வைத்திருந்தனர். உடனே ரோந்து பணியில் இருந்த வினோத் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது, அவர்கள் கோவண்டி ரயில் நிலையம் அருகே ஷேக் என்பவரை விட்டுவிட்டு மீதம் இருந்த 2 பேர் பைக்கில் தப்பினர்.
இந்நிலையில், ஷேக் வைத்திருந்த கத்தியை வினோத் வாங்க முயற்சி செய்தபோது, ஷேக் தனது கையில் இருந்த பீர் பாட்டிலை வைத்து வினோத் தலையில் அடித்து நொறுக்கினார். அப்போது, அருகில் இருந்த பொதுமக்கள் ஷேக்கைப் பிடித்தனர்.
காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத்தை மீட்டுமருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த கான்ஸ்டபிள் வினோத் நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.…
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…