தெலுங்கானா மாநிலத்தில் திருமணமாகிய ஐந்து நாளில் மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளதால் மத்திய அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கடுமையான கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகரகர்நூல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவாணி எனும் இளம் பெண்ணுக்கும் தண்டூர் எனும் பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. ஊரடங்கு காரணமாக உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அருகிலிருந்த கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்த பின்னர் அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அதன் பின் அந்த புதுப்பெண் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தான் அவர் உயிரிழந்து இருப்பார் என உறவினர்கள் கூறினாலும்.
திருமணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு தான் பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என வந்ததாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அப்பெண் உயிரிழந்ததற்கான கரணம் என்ன என்று தெரியாவிட்டாலும், திருமணமாகி 5 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…