19 கால் விரல்கள், 12 கை விரல்கள்.! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 63 வயது மூதாட்டி.!
- ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இந்த மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது.
- ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை மூதாட்டி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய குமாரி நாயக் என்ற மூதாட்டிக்கு பாலிடாக்டைலிசம் என்ற அரியவகை நோய் தாக்கியதில், 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இதனால் அவரை பார்த்து ஊர் மக்கள் பயந்து, அவரை சூனியக்காரி என தவறாக புரிந்து கொண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். பின்னர் ஊரே தன்னை ஒதுக்கியதால் தனிமையில் மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது.
ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் என்பவரின் கின்னஸ் சாதனையை இந்த மூதாட்டி குமாரி நாயக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை புத்தகத்தால் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்த மூதாட்டி குமாரி நாயக்கை சந்தித்த அரசு அதிகாரிகள், அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு நாள் எந்த ஊர் அந்த மூதாட்டியை ஒதுக்கி வைத்ததோ அவர்களே தற்போது மூதாட்டியை வந்து பார்த்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.