குஜராத்தில் அடுத்தடுத்து 19 முறை நிலநடுக்கம்…! அதிர்ச்சியில் மக்கள்..!

Default Image

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை வரை 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவிலான 19 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு உயிரிழப்பு  அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) ஒரு மூத்த அதிகாரி இந்த நிகழ்வுகளை “பருவமழையால் ஏற்பட்டநில அதிர்வு” என்று கூறினார். பொதுவாக குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்கள் பெய்த கனமழையால் இது ஏற்பட்டது, கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார்.

அதிகாலை 1.42 மணி முதல், 19 நிலநடுக்கங்கள், 1.7 முதல் 3.3 வரை ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு (ENE) மையப்பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவில் குறைவானவை என்றாலும், 6 நிலநடுக்கம்  3 -க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகியது. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 12 கி.மீ. இல் இருந்தது.

3.2 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் காலை 9.26 மணியளவில் தலாலாவின் 11 கி.மீ மையப்பகுதியில் உணரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்