186 நாடுகளுடன் கடந்த 4 ஆண்டில் அமைச்சரக அளவில் பேச்சுவார்த்தை!வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,கடந்த 4 ஆண்டுகளில் 186 நாடுகளுடன் அமைச்சரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நான்காண்டு சாதனைகளை அவர் வெளியிட்டார். இணையமைச்சர்கள் வி.கே.சிங், எம்.ஜே.அக்பருடன் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தீவிரவாதச் செயல்களும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடைபெற முடியாது என குறிப்பிட்டார். டோக்லம் விவகாரத்தை பொறுத்தவரை, அங்கு ஏற்கெனவே இருந்த நிலை தொடர்வதாகவும், அதில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் சுஷ்மா சுவராஜ் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில் போர், உள்நாட்டுக் குழப்பம் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டபோது அங்கிருந்த 90 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.