Big Breaking:இந்தியாவில் ஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா;1,026 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 185,248 பேருக்கு கொரோனா,1,026 பேர் உயிரிழப்பு.மஹாராஷ்டிராவில்15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.
- இந்தியா கொரோனா பாதிப்பில் இதுவரை இல்லாத ஒரே நாளில் உச்சகட்டமாக 185,248 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதிப்பு 13,871,321 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா பாதிப்பில் இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும்,சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
- கடந்த 24 மணிக்கு நேரத்தில் மட்டும் 1,026 பேர் உயிரிழந்துள்ளனர்,இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 172,115 ஆக அதிகரித்துள்ளது.
- மஹாராஷ்டிராவில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 13,468 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது இதுவரை இல்லாத ஒரே ஒரு நாள் எண்ணிக்கையாகும்.
- இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உள்ள முதல் 5 மாநிலங்கள் மகாராஷ்டிரா (3,519,208), கேரளா (1,172,882), கர்நாடகா (1,074,869), தமிழ்நாடு (940,145), மற்றும் ஆந்திரா (928,664) பதிவாகியுள்ளது.