உக்ரைனில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

Default Image

உக்ரைனில் இருந்து 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலமாக இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் பல மருத்துவமனைகளில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பற்றாக்குறை அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து இந்தியாவிற்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆக்சிஜன்  சிலிண்டர்கள், மருந்துகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்பொழுது உக்ரைனில் இருந்து விமானம் மூலமாக 184 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகாரணகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் அனைத்தும் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்றும் அங்கிருந்து தேவைப்படக்கூடிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்