8 மாதத்தில் 1836 குழந்தைகள் தத்தெடுப்பு.! வெளியான சர்வே ரிப்போர்ட்.!
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நாட்டில் 1,836 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன என தகவல்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கி மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்டின் இறுதி மாதம் என்பதால் நடப்பாண்டில் நடைபெற்ற பல்வேறு முக்கிய புள்ளி விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது.
அந்தவகையில், 2022 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நாட்டில் 1,836 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குழந்தைகள் தத்தெடுப்பு தொடர்பான புள்ளி விவரங்களை குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நடப்பு நிதியாண்டில் 222 குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.