5 குழந்தைகள் உட்பட 182 இந்தியர்கள் பஹ்ரைனில் இருந்து கொச்சிக்கு வந்திறங்கினர்.!
பஹ்ரைன் தலைநகர் மனாமாவிலிருந்து ஊர்திரும்ப முடியாமல் தவித்து வந்த 182 இந்தியர்கள் (5 குழந்தைகள் உட்பட) கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்திறங்கினர்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் பெரும்பாலான நாடுகளில் பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக 64 ஏர் இந்தியா விமானங்களை மற்ற நாடுகளுக்கு அனுப்பி வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க கடந்த மே 7 முதல் விமான சேவையானது தொடங்கப்பட்டது.
ஏற்கனவே துபாய் தலைநகர் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 49 கர்ப்பிணிகள் உட்பட 177 இந்தியர்கள் கேரளா மாநிலம் கொச்சி வந்திறங்கினார். அதனை தொடர்ந்து தற்போது பஹ்ரைன் தலைநகர் மனாமாவிலிருந்து ஊர்திரும்ப முடியாமல் தவித்து வந்த 182 இந்தியர்கள் (5 குழந்தைகள் உட்பட) கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்திறங்கினர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வழக்கம்போல கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.