கும்பமேளாவால் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1800% கொரோனா தொற்று அதிகரிப்பு..!
உத்ரகாண்ட்டில் கும்பமேளாவால் தொற்று 1800% ஆக அதிகரிப்பு ,2020 ஆம் ஆண்டை விட அதிகரித்த இறப்பு.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை ஹரித்வாரில் மகா கும்பமேளா நடைபெற்றதால் கொரோனா தொற்று 1800% ஆக அதிகரித்துள்ளது.
உத்ரகாண்ட்டில் ஒரு மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் இந்த கும்பமேளா நிகழ்வு ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக மாறியுள்ளது.
ஹரித்வாரில் ஏப்ரல் 12ஆம் தேதி 35 லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஏப்ரல் 14 இல் 13.51 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது வரை 1,713 பேர் தொற்றால் இறந்துள்ளனர்.
இது 2020 ஆம் ஆண்டில் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்புகளில் பாதியாகும்.மேலும், உத்ரகாண்ட்டில் 24% பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது