ரூ.99க்கு 180 மில்லி மதுபானம்.! ஆந்திராவில் அமலாகிறது “புதிய மதுபான கொள்கை”
வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆந்திராவில் புதிய மதுபான கொள்கை அமலாகிறது. இதன் மூலம் ரூ.99க்கு 180 மில்லி மதுபானம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் : மது பிரியர்களுக்கு குறைவான விலையில் மதுவை அளிக்கும் பொருட்டு ஆந்திர மாநில அரசு ‘புதிய மதுபான கொள்கை’-யை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.99யில் இருந்தே 180 மில்லி மதுபானம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து ஆந்திர மாநில அமைச்சர் கே.பார்த்தசாரதி கூறுகையில், மாநில முதலமைச்சர் சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவை புதிய மதுபான கொள்கைக்கு கையெழுத்திட்டுள்ளது. திருப்பதியை தவிர்த்து 12 மாவட்டங்களில் 3,736 சில்லறை மதுபான கடைகள் தனியார் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த புதிய மதுபான கொள்கையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், குறைவான விலையில் தரமான மதுபானங்கள் மதுபிரியர்களுக்கு கிடைக்க இத்திட்டம் வழிவகை செய்யும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்றும் அமைச்சர் கே.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.