உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண்.
உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார்.
இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் பகுதி விலங்குகளால் கடித்து குதறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பெண்ணின் மொபைல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் அவர் அருகிலேயே கிடந்துள்ளது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக, இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சத்யேந்திர குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த கிராமத்தில் பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…