ஆந்திரா, தெலுங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை.. செப்.4 வரை 18 ரயில்கள் ரத்து.!

ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக செப்டம்பர் 6 வரை சென்னை, தாம்பரம் வரும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Southern Railways

ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் கொட்டித் தீர்த்த கனமழையால் விஜயவாடா உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. வயநாடு நிலச்சரிவு துயரம் மறைவதற்குள், ஆந்திரா தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

மேலும், கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் 110 கிராமங்கள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஹைதராபாத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா வெள்ளத்தில் இருந்து 17,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு மாநில முதல்வர்களையும் மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பலர் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானாவில் தொடரும் கனமழையால் ராயப்பனாடு ரயில்நிலைய தண்டவாளம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் 2வது நாளாக ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று வடமாநிலங்களுக்கு செல்லவிருந்த 7 ரயில்கள் உட்பட 18 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஷாலிமர் கோரமண்டல் விரைவு ரயில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், அகமதாபாத் – சென்னை நவஜீவன் விரைவு ரயில், விஜயவாடா – காசியாபாத் ரயில்கள், சென்ட்ரல் – புரி, நவஜீவன் எக்ஸ்பிரஸ், ஷாலிமார், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், மைசூரு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது, 46 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டது. இதனிடையே, 044-25354995 மற்றும் 044-25354151 தொடர்பு கொண்டு ரயில்களின் இயக்கம் குறித்த தகவல்களை அறியலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்