அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, அறிந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஆணையர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தர்களில் 10 பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் உள்ளனர், அவர்களில் ஆறு பேர் தானே நகரைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் கல்யாண், 3 பேர் சஹாபூரைச் சேர்ந்தவர்கள், பிவாண்டி, உல்ஹாஸ்நகர் மற்றும் கோவண்டியில் இருந்து தலா ஒருவர் எனவும், ஒரு நோயாளி வேறு இடத்திலிருந்து வந்தவர் மற்றும் ஒருவர் அடையாளம் தெரியாதவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த நோயாளிகளில் சிலர் ஏற்கனவே நீண்டகால சிறுநீரக நோய், நிமோனியா, மண்ணெண்ணெய் விஷம், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.