ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 18 OTT தளங்கள் முடக்கம்!

OTT sites banned

OTT Platforms: இணையத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை ஒளிபரப்பும் 18 OTT தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதள கணக்குகளை ஒன்றிய தகவல் தொடர் அமைச்சகம் முடக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (I&B) பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

READ MORE – குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!

தடைசெய்யப்பட்ட 57 சமூக வலைதள கணக்குகளில் 12 பேஸ்புக் கணக்குகள், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 16 எக்ஸ் தள கணக்குகள் மற்றும் 12 யூடியூப் கணக்குகள் அடங்கும். மேலும், தடைசெய்யப்பட்ட 10 ஆப்களில் ஏழு கூகுள் பிளே ஸ்டோரிலும், மூன்று ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE – பிட்புல் உள்ளிட்ட ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

தடைசெய்யப்பட்ட OTT தளங்களின் பட்டியல்

1.Dreams Films
2.Voovi
3.Yessma
4.Uncut Adda
5.Tri Flicks
6.X Prime
7.Neon X VIP
8.Besharams
9.Hunters
10.Rabbit
11.Xtramood
12.Nuefliks
13.MoodX
14.Mojflix
15.Hot Shots VIP
16.Fugi
17.Chikooflix
18.Prime Play ஆகியவை அடங்கும்.

READ MORE – தெலுங்கானாவில் அதிரடி மாற்றம்… இனி “TS” இல்ல “TG” தான்!

இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதில், சில OTT தளங்கள் 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்