வெளியான 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு…! தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தல் …!தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தொகுதிகள் காலியானால் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதி இருப்பதால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.