18 மணி நேர போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமி, 18 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
செய்ப்பூர் : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தின், பாண்டிகுய் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, அருகில் இருந்த 35 அடி மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் மீட்புப்படையினரை வரவைத்து மீட்பு பணியை துரித படுத்தினர். ஆனால், மழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இருந்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் கடந்த 18 மணி நேரமாக ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் முயற்சி இரவு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில், 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை உயிருடன் மீட்டுள்ளது மீட்பு குழு.
35 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை, ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி NDRF வீரர்கள் மீட்டனர். சற்று முன் குழந்தை உயிருடன் மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மீட்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் கூறுகையில், சிறுமியை மீட்க குழுக்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருவதாகவும், ஆனால் மழை காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வது கடினமாக இருந்தது என தெரிந்தார்.