பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

Default Image

பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரோட்டா என்பது தமிழர்கள் மட்டுமல்லாமல் தென் இந்தியர்களின் பிரியமான உணவாக உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சேர்ந்த  ஐடி பிரெஷ் ஃபுட் நிறுவனம்(ID Fresh Food)  இட்லி, தோசை மாவு, தயிர், பன்னீர், பரோட்டா உள்ளிட்ட அப்படியே சமைக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இதையடுத்து, இந்த நிறுவனம் ரொட்டி, சப்பாத்தி ஆகியவைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும், எனவே இதை குறைத்து உத்தரவிட வேண்டும் என Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு தொடர்ந்தது. இந்த அமைப்பானது ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசின் அமைப்பாகும். 

இந்த வழக்கின் தீர்ப்பில் பரோட்டா என்பது, 18 சதவீத வரி விதிக்கப்படும் உயர்தர உணவு வகைகளில் ஒன்று எனவும்,  5 சதவீத வரி வசூலிக்கப்படும் சப்பாத்தி மற்றும் ரொட்டி வகைகளில் சேராது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இதனால், நெட்டிசன்கள் பரோட்டா, ரொட்டி ஆகிய  இரண்டுமே மைதாவிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அவற்றைச் சமைக்கும் முறையே மாறுபடும். ஆனால், பரோட்டாவுக்கு 18% சதவீத வரி, ரொட்டிக்கு 5%. ஏன்..? என கூறி #handsoffporotta (பரோட்டாவிலிருந்து கையை எடு) என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்