18 கோடி இந்தியர்களுக்கு கொரோனா நோய் ஏதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்பு- பரிசோதனை முடிவில் தகவல்!
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம், அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையே ஆகும். இதன்காரணமாக, கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்க்கு சோதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், தைரோகேர் எனும் தனியார் ஆய்வகம், இந்தியா முழுவதும் 20 நாட்களாக ஆன்டிபாடி சோதனை நடத்திய நிலையில், தற்பொழுது அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸுக்கு எதிராக நாட்டில் உள்ள 18 கோடி மக்களின் உடலில் ஏற்கனவே ஆன்டிபாடிகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள், 20 நாட்களில் 600 பின்கோடுகளில் நடத்தப்பட்ட 60,000 ஆன்டிபாடி சோதனைகள் நடத்தினார்கள். மேலும், நாட்டில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் ஏற்கனவே கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தைரோகேர் டெக்னாலஜிஸின் தலைவர் மற்றும் நிறுவனருமான டாக்டர் ஏ.வேலுமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சோதனைகளின் முடிவுகளை வெளியிட்டார்.
அதன் முடிவுகளின்படி, மும்பை, தானேவில் உள்ள பிவாண்டி பகுதியில் 44% மக்களுக்கு ஆன்டிபாடி உள்ளது எனவும், அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பீன்யா தசரஹள்ளி பகுதியில் 44% மக்களுக்கும், புதுதில்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் 37.7% மக்களுக்கும், ஹைதராபாத் ஜூபிலி பகுதியில் 37.3% பேருக்கு ஆன்டிபாடி உள்ளது என அந்த முடிவுகளில் டாக்டர் ஏ.வேலுமணி தெரிவித்தார்.
#AntibodyTesting
Rapid kits – Qualitative.
ELISA- Semi quantitative
CLIA – Quantitative.
Now for #PlasmaTherapy easy to identify #AntibodyRich .
Also
How rich and where are they for each district. @swapneilparikh pic.twitter.com/tGfn1AjJ66— Antibody Velumani. (@velumania) July 20, 2020
மேலும் இது ஒரு ஆய்வு அல்ல எனவும், யாரை சோதிக்க வேண்டும் என்பதை நாங்கள் தேர்வு செய்யவில்லை, ஆன்டிபாடி பரிசோதனைக்கு முன்வந்தவர்களை மட்டுமே நாங்கள் சோதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இந்த சோதனைகளுக்காக 80% கார்ப்பரேட்டுகள், 15 சதவிகிதம் குடியிருப்பு சங்கங்களின் மற்றும் 5% தனி நபர்கள் தேவைப்பட்டதாகவும், அதற்க்கு நரிமன் பாயிண்டில் இருந்து ஜாம்ஷெட்ப்பூரில் உள்ள அனைத்து முள்குறியீடுகளை உள்ளடக்கியதாக தெரிவித்தார்.
மேலும், பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சில மூடப்பட்டுள்ளதாகவும், இந்த முள் குறியீடுகளில் பெரும்பாலானவை மாநிலத்திற்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள் / சிவப்பு மண்டலங்களும் வருகின்றதாவும் தெரிவித்தார்.