உ.பி.யில் வைரஸ் காய்ச்சலால் 171 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மோதிலால் நேரு மருத்துவமனையில் 170 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல், நிமோனியா போன்ற வைரஸ் காய்ச்சலால் அனுமதி
உத்தரபிரதேசத்தில் உள்ள பிராஜ் பகுதியிலிருந்து தொடங்கிய வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு அம்மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தையும் சூழ்ந்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், மழைக்காலம் மற்றும் மழைக்குப் பிறகு பரவும் நோயைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பிரயாக்ராஜ் மோதிலால் நேரு மருத்துவமனையில் 170 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் நானக் சரண் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, நான் குழந்தைகள் வார்டில் ஆய்வு செய்தபோது, 120 படுக்கைகள் இருந்தன. தற்போது 171 குழந்தைகள் உள்ளதால் நாங்கள் 2-3 குழந்தைகளை ஒரே படுக்கையில் மாற்றியுள்ளோம்.
டெங்கு நோயாளிகள் இங்கு குறைவாக உள்ளனர். மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற காய்ச்சல் காரணமாக தான் அனுமதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். 200 படுக்கைகள் கொண்ட வார்டு கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.