புனே சொகுசு கார் விபத்து வழக்கில் – 17 வயது நபருக்கு ஜாமின்!

Bombay HC Porsche

புனே : கடந்த மே 19ம் தேதி புனேயில் உள்ள பிரபல கட்டிடத் தொழிலாளியின் 17 வயது மகன், குடிபோதையில் போர்ச் டெய்கான் காரை ஓட்டியதாகவும், ​​கல்யாணி நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதிய சம்பவவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இவ்வழக்கில், சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு பிணை வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்நபர் உட்பட குடும்பமே சிறை தண்டனை அனுபவிக்கும் நிலையில், சாட்சியங்களை மாற்றியதற்காகக் கைதான தந்தை விஷாலுக்கு சில தினங்களுக்கு முன்பு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அவரின் தாயார், தாத்தா இன்னும் சிறையில் உள்ளனர்.

17 வயது சிறுவனின் தந்தைவழி அத்தை தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது. உத்தரவின்படி, சிறுவனை அவரது தந்தைவழி அத்தையின் பராமரிப்பிலும் இருக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்