வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமி! மீண்டும் குடும்பத்துடன் இணைத்த போலீசார்!
மும்பையின் கவர்ச்சியான வாழ்க்கை முறையை கண்டு ஈர்க்கப்பட்டதால், வீட்டை ஓடிய 17 வயது சிறுமியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்.
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஜமல்பூர் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்துள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி மும்பையில் இருந்து 35 கிலோன் மீட்டர் தூரத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விடுதியில் உள்ள ராஜ்மௌலி நாகாவின் பாலத்தின் அடியில் அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து உள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது மும்பையின் கவர்ச்சியான வாழ்க்கை முறையை கண்டு ஈர்க்கப்பட்டதாகவும், இதனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தனது வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் அங்கு வேலை செய்து திரைப்பட நட்சத்திரங்களை பார்க்க விரும்புவதாகவும் சிறுமி போலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு உத்திரப்பிர தேசத்தில் உள்ள ஜமல்பூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். இதனை அங்கு இந்திய தண்டனை சட்டம் சட்டம் பிரிவு 363 இன் கீழ் கடத்தல் புகாரை சிறுமியின் குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு அவர்களை அங்கு அழைத்து, சிறுமியை மீண்டும் அவரது குடும்பத்தோடு இணைத்து வைத்துள்ளனர்