நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று விவசாயிகள் பிரச்சனை முடங்கியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிட்டிருந்தனர். பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் முதலில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூறி கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் 16 ஆவது நாளாக மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது.
மேலும், பிற்பகல் 12 மணி வரை இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைப்பதற்கு முன், விவசாயிகள் பிரச்சனைக்கு இந்த அவை கவலைப்படுவதில்லை என்ற தகவல் மக்களுக்கு சேரக்கூடாது. இதற்கு அவை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…