இந்தியா முழுவதும் இன்று முதல் 168 ரயில்கள் ரத்து .!
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மிகிக்குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவானதால் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உள்ளது.