டெல்லியில் கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 42 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வதந்திகள் பரவுவதை தடுக்க பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…