161 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை – திறந்து வைத்த பிரதமர் மோடி!
கர்நாடகா:உலகின் உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் துமகூரு அருகே பிதனகெரே கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். ராம நவமியையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைத்துள்ளார்.
ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார்.மேலும்,இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேலும்,இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் கூறுகையில்:”இது கனவு திட்டம்.இந்த புனித ஆஞ்சநேயர் சிலை திறப்பு நிகழ்வு ராமநவமி நாளில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்துள்ளார்.