டெல்லியில் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி! இதன் பின்னணி என்ன?
டெல்லியில் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி.
ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, திங்களன்று தனது வீட்டில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து, செவ்வாய்கிழமை அன்று வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை இரகசியமாக புதைக்க என்ன காரணம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து, சிறுமியின் கொரோனா பரிசோதனைக்கு பின், பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ள நிலையில், சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுமி தனது தாய் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த குடும்பம் ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்தது மற்றும் நிதி ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளது. அவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயிடம் விசாரித்த போது, தற்கொலை குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.