இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் ஆந்திராவில் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வெங்காயம் வாங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி தாய் வெளியே சென்றதால் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் சிறுமியின் வாயில் துணியை வைத்து பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தாய்க்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் நிறைவேறிய பின்னர் நடந்த முதல் கைது சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…