கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 16 நாள் பெண் குழந்தை ஜூலை 1 ம் தேதி அவரது இல்லத்தில் இறந்தது என்று சுகாதார புல்லட்டின் நேற்று தெரிவித்துள்ளது. அந்த குழந்தை காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாக்டர் திரிலோக் சந்திரா கூறுகையில், “அந்த குழந்தை ஜூன் 15 ஆம் தேதி பிரசவிக்கப்பட்டு, வயிற்றுப் பற்றாக்குறை காரணமாக ஜூன் 20 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டது.
பின் கொரோனா சோதணை சோதித்ததில் ஜூன் 26 அன்று குழந்தை வீட்டில் இருந்தபோது முடிவு கொரோனா இருப்பது உறுதியானது. அதன் பின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 1 ம் தேதி அந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 684 அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூருவில் ஜூலை 14 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…