பெங்களூரில் பிறந்து 16 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!

Default Image

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 16 நாள் பெண் குழந்தை ஜூலை 1 ம் தேதி அவரது இல்லத்தில் இறந்தது என்று சுகாதார புல்லட்டின் நேற்று தெரிவித்துள்ளது. அந்த குழந்தை காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டாக்டர் திரிலோக் சந்திரா கூறுகையில், “அந்த குழந்தை ஜூன் 15 ஆம் தேதி பிரசவிக்கப்பட்டு, வயிற்றுப் பற்றாக்குறை காரணமாக ஜூன் 20 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டது.

பின் கொரோனா சோதணை சோதித்ததில் ஜூன் 26 அன்று குழந்தை வீட்டில் இருந்தபோது முடிவு கொரோனா இருப்பது உறுதியானது. அதன் பின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 1 ம் தேதி  அந்த குழந்தை இறந்தது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,843 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 684 அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பெங்களூருவில் ஜூலை 14 -ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை22 -ம் தேதி காலை 5 மணி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்