பீகாரில் கள்ள சாராயம் அருந்திய 16 பேர் உயிரிழப்பு..! 48 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்த நிலையில், 48 பேர் மருத்துவமனையில் அனுமதி.
பீகாரில் கள்ள மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், லக்ஷ்மிபூர், பஹர்பூர் மற்றும் ஹர்சித்தி போன்ற பல்வேறு கிராமங்களில் கள்ள சாராயம் குடித்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ள சாராயம் அருந்திய 16 பேர் உயிரிழப்பு
மேலும் 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாட்னாவில் இருந்து மதுவிலக்கு பிரிவின் சிறப்புக் குழு இந்த விஷயத்தை விசாரிக்க மோதிஹாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஐந்து போலீஸ் அதிகாரிகள், இரண்டு டிஎஸ்பிகள் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக பீகார் காவல்துறை தலைமையக அறிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி, சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கலால் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக பீகார் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.