ஜி-20 மாநாட்டின் போது ஒவ்வொரு நிமிடமும் 16 லட்சம் சைபர் தாக்குதல்..!

ஜி20 மாநாட்டை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதில் இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சிகள் சிறப்பாக செயல்பட்டனர். ஜி20 மாநாட்டின் போது ஜி20 இணையதளத்தில்(ஜி20 போர்டல்) நிமிடத்திற்கு 16 லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்தது. ஆனால் CERT-In, C-DAC மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) போன்ற ஏஜென்சிகள் இந்த தாக்குதல்களை தடுத்ததால் G20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிறுவப்பட்ட ‘இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின்’ (I4C) தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று கூறுகையில், சைபர் கிரைம் காரணமாக நாட்டில் தினமும் 50,000 அழைப்புகள் வருகின்றன என்றார். ஒரு லட்சம் பேர் மீது 129 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் கிரைம் தொடர்பான புகார் ஒரு மணி நேரத்திற்குள் கிடைத்தால், பண இழப்பைத் தவிர்க்கலாம். ஜி20 மாநாட்டின் போது ஒவ்வொரு நிமிடமும் 16 லட்சம் இணைய தாக்குதல்கள் நடந்துள்ளன.

மத்திய ஏஜென்சிகள், தங்கள் உடனடி நடவடிக்கை மூலம் இணைய தாக்குதல்கள் தடுக்கப்பட்டது என தெரிவித்தார்.  மேலும், முன்னதாக சிம் கார்டு, இணையதளம் அல்லது ஆப்ஸ் மட்டுமே தடுக்கப்பட்டது. இந்த ஆண்டு, ‘இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின்’ ஒரு பெரிய சாதனை என்னவென்றால், நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு சாரா வங்கிகளும் I4C உடன் இணைக்கப்படும்.

சைபர் குற்றங்களை கையாள்வதில் இது பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் சைபர் குற்றச் சம்பவங்களை உரிய நேரத்தில் எதிர்கொள்ள முடியும். தற்போது சில வங்கிகள் மட்டுமே I4C உடன் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்