டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 16 இலக்க எண் அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களின் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள் பொருட்களை வாங்குவதற்கு கூகுள் பே, போன் பே, பே.டி.எம் ஆகிய செயலிகளின் மூலமாக பணத்தை செலுத்துகின்றனர். இது போன்ற பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கார்டின் பின்புறம் இருக்கும் மூன்று இலக்க சி.வி.வி. விபரத்தை வழங்கிய பின் பணம் செலுத்தப்படுவது வழக்கம்.
தற்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் படி மின்னணு பரிவர்த்தனையின் போது கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறம் உள்ள 16 இலக்க எண், காலாவதியாகும் தேதி, சி.வி.வி. விபரம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். இந்த முறை குறித்து நுகர்வோர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ஒரு நபரிடம் பல கார்டுகள் இருக்கும் என்பதால் அந்த 16 இலக்க எண்ணை நினைவில் வைத்து பரிவர்த்தனை செய்வது கடினம்.
ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் இந்த 16 இலக்கை எண்ணை அனுப்புவது என்பது சிரமமான செயலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதாவது, இந்த முறையானது வாடிக்கையாளர்களின் பாதுக்காப்பு கருதியே மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறையானது அடுத்த ஆண்டிலிருந்து அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…