முகமது இக்லக் என்ற வயோதிகரை கொன்ற பசு பாதுகாப்பு படையினை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பலுக்கு அரசு வேலை….!
உத்திரபிரதேசத்தில் தாத்ரி என்ற ஊரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி முகமது இக்லக் என்ற வயோதிகரை பசு பாதுகாப்பு படையினர் 15 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கொலைசெய்ததனர்.. கொலையாளிகள் கைது செய்யப்பட போதிலும் அடுத்த வாரமே ஜாமீனில் வெளி வந்து விட்டனர். அந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் அந்த கொலையாளிகள் 15 பேருக்கும் அரசு நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிலையத்தில்உள்ளூர் பா.ஜ. க. எம்.எல்.ஏ சிபாரிசின்படி வேலை கொடுக்கப்பட்டுள்ளது. பசு பாதுகாப்பு படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கையே அவர்களுக்கு அரசு வேலை கொடுத்திருப்பது ஆகும்.