157 தங்க மீன்களால் ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்..!
மும்பை பகுதியில் 157 தங்க மீன்களால் ஒரே நாளில் மீனவர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியை சேர்ந்த மீனவர் சந்திரகாந்த் தாரே. மீன்பிடி தடைகாலம் முடிந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதியிலிருந்து மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இவர் மீன் பிடிக்க வழக்கமான மும்பை கடல்பகுதியில் பிடித்துள்ளார். அப்போது இவரது வலையில் அதிக மீன்கள் சிக்கி வலை இழுக்கமுடியாத அளவு காணப்பட்டுள்ளது.
உடனே வலையை இழுத்து கப்பலில் போட்டுள்ளார். வலையை பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளானார். அதிர்ச்சிக்கு காரணம் இவருடைய வலையில் மிகவும் அரிதான மருத்துவ குணங்கள் நிறைந்த கோல் மீன்கள் எனப்படும் மீன்கள் 157 சிக்கியிருந்துள்ளது. உயர்ந்த மீன்களில் ஒன்றான இந்த கோல் மீனுக்கு பல நாடுகளில் கிராக்கி அதிகம் என்பதால் கரைக்கு வந்த சந்திரகாந்த் மீன்களைஏலம் விட்டுள்ளார்.
இந்த மீன்கள் ஏலத்தில் 1.33 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணம் விரைவில் அளிக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.