அமேசான் நிறுவனம் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒரு அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது ,இந்தியாவில் 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது, இது கொல்கத்தா, புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூர், லக்னோ, போபால், ஆகிய 11 நகரங்களில் அறிவிக்கப் பட்டுள்ளது மேலும் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு வரும்காலத்திற்கு மிகவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வேலைக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தால் கூட போதும் ஆனால் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இரண்டில் ஒன்றினை சகஜமாக பேச வேண்டும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேளையில் ஈடுபடுவதால் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது .
இது தற்காலிக வேலை என்றும் 6 மாத காலம் வரையில் இதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது ,அப்படி என்னவேலை என்றால் சமூகத்தில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் மெயில்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் , இதைப் பற்றி தெரிந்தவர்கள் இருந்தால் இந்த வாய்ப்பை இழக்காமல் விரைவில் சேரலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும் அவர்களின் திறமை மற்றும் அவர்கள் எந்த அளவிற்கு வேகமாக சுறுசுறுப்புடன் வேலை செய்கிறார்கள், ஆகியவற்றை கருத்தில் கொண்டு பதவிகள் நிரந்தரமாக கூட வாய்ப்பு இருக்கலாம் என்றும் அமேசான் இந்த அட்டகாசமான வாய்ப்பை அறிவித்துள்ளது.
இந்த வேலையை seasonalhiringindia@amazon.com என்ற மெயில் ஐடி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. அல்லது 1800-208-9900 என்ற என்னை தொடர்பு கொண்டு விவரங்களை கூறலாம்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…