உ .பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு ஏழை பெண்களுக்கு அரசு செலவில் திருமணத்திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.35,000 கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு அதிகமான பெண்களுக்கு அரசு செலவில் திருமண நடத்தி வைக்க திட்டமிட்டு உள்ளனர்.அடுத்த ஆண்டு மணப்பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.51,000 கொடுக்க உ.பி மாநில சமூக நலத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இது குறித்து உ.பி சமூக நலத்துறை அமைச்சர் ரமாபதி திரிபாதி கூறுகையில் ,இந்த திட்டத்திற்கு ஏழை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வரும் வருடம் திருமண ஜோடிகளின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி 10,000 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தப் பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் வரும் வருடம் 15,000 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்தவுள்ளதாக கூறினார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…