15,000 கோடி நிதி ஒதுக்கீடு.! 7,774 கோடி அவசரகால தேவைக்காக விடுவிப்பு.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. அவரச தேவைக்காக 7,774 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவலை தடுக்கவும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 15,000 கோடி நிதியை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், தற்போது அவரச தேவைக்காக 7,774 கோடி ரூபாயை விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.