குஜராத் அரசு விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ1,500 வரை நிதியுதவி என அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1500 நிதியுதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல், மாநில வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் டிஜிட்டல் சேவையின் போக்கு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஸ்மார்ட் போன்களை வாங்க விவசாயிகளை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன் மற்றும் கூட்டுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் நிலம் வைத்திருக்கும் எந்தவொரு விவசாயியும் ஸ்மார்ட்போன் வாங்க 1,500 நிதிஉதவி வழங்கப்படும் எனவும், பவர் பேங்க் , இயர்போன்கள் அல்லது சார்ஜர்கள் போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு, வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்கள், நவீன விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைப் பற்றிய தகவல்களைப் பெற இந்த ஸ்மார்ட்போன் விவசாயிகளுக்கு எளிதாக உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…