மலேசியாவில் சிக்கித் தவித்த 150 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வருவதற்காக ஏராளமானோர் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன் வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க கட்டுப்பாடு விதித்திருந்தது. மேலும் மலேசியா அரசு அனைத்து விமானங்களையும் தடை செய்திருந்தது. இதனால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் மாணவர்கள் கோலாலம்பூரில் விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில், சொந்த ஊருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டதை வீடியோ மூலம் மாணவர்கள் பகிர்ந்து அவர்களின் நிலைமையை தெரிவித்தனர். தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உட்பட 150 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.