புதுச்சேரி மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதி!
காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதி என சுகாதார இயக்குநர் தகவல்.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாவே வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு தினமும் காய்ச்சலால் 50 முதல் 100 பேர் வரை வருகின்றனர் என்றும் கூறியுள்ளார். தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை, தற்போது காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.