சகோதரன் முன்பு 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி – 3 பேர் கைது!

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அண்டை வீட்டை சேர்ந்த 4 பேர், அவளது 12 வயது தம்பி முன்பு வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் 15 வயது சிறுமி தனது 12 வயது தம்பியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர்களது பெற்றோர்கள் வேறு ஒரு கிராமத்தில் நடந்த விழா ஒன்றிற்காக வெளியே சென்றிருந்துள்ளனர். அந்த சமயம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் அவர்களது வீட்டுக்குள் நுழைந்து குழந்தைகள் இருவரும் தூங்குவதை கண்ட பின்பும், அந்த 15 வயது சிறுமியை 12 வயது சகோதரன் முன்னிலையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்துள்ள புகாரில் தாங்கள் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அவளது சகோதரனை துப்பாக்கி முனையில் வைத்திருந்ததாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் இதைப் பற்றி கூறினால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமியின் தந்தை தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்பு பெற்றோர்கள் வருவதைக் கண்ட சிறுவன் ஓடி சென்று தனது சகோதரிக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தான் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நான்காவது நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025